கடிகார நேரத்தைப் பின்பற்றி குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது தவறு. பசிக்கிறது என்று குழந்தைகள் உணவு கேட்கும் வரையில் காத்திருந்து பசிக்கும்போது உணவு கொடுப்பது நல்லது. பசியில்லாமல் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் உணவுகள், பின்னாட்களில் அவர்களுக்கு அஜீரணத்தையும் நோய்களையும் உருவாக்கும்.