மனித உடல் என்பது தனி தனி உறுப்புகளாக இயங்குவதில்லை. மனிதர்களின் உடல் தலை முடி முதல் கால்களின் பாதம் வரையில் ஒரு முழுமையான இயக்கமாக தான் இயங்குகின்றது.

உடல் ஒரு முழுமையான இயக்கமாக இயங்கும்போது, மூளை மட்டும் தனியாக சாவதற்கு நிச்சயமாக வாய்ப்பில்லை. உடலில் ஏதாவது ஒரு இயக்கம் இருந்தாலும், ஒரு உறுப்பு இயங்கினாலும் அந்த மனிதன் உயிரோடு இருக்கிறான் என்று பொருளாகும்.

கோமா நிலைக்கும் மூளைச் சாவுக்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. மூளைச்சாவு அடைந்தவர்களுக்கு உடலின் வெளியுறுப்புகள் மட்டுமே செயலிழந்து இருக்கும், உள்ளுறுப்புக்கள் அத்தனையும் இயல்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும். 

மூளைச்சாவு அடைந்து விட்டதாக நம்பப்படுபவர் கூட ஒருநாள் மீண்டும் எழுந்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.