சிலருக்கு நோய்கள் உருவானால், ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் நோய்கள் குணமாகிவிடும். சிலருக்கு சில குறிப்பிட்ட மருத்துவர்களைச் சென்று சந்தித்தாலே உடலில் தொந்தரவுகள் குறைந்துவிடும். சிலருக்கு உடலில் தொந்தரவுகள் உருவானால் மருந்து மாத்திரைகளை உட்கொண்டால் மட்டுமே அந்த தொந்தரவுகள் நீங்கும்.
சிலருக்கு சில செயல்களைச் செய்தாலும், சில மனிதர்களை சந்தித்தாலும், சில இடங்களுக்குச் சென்றாலும், உடலில் தொந்தரவுகள் குறைந்துவிடும். ஒரு சிலருக்கு இவை எதையுமே செய்யாமலேயே மருந்து மாத்திரைகள் இல்லாமலேயே தூங்கி எழுந்தாலே அனைத்து தொந்தரவுகளும் குணமாகிவிடும்.
இவைதான் ப்லேசிபோ எபெக்ட்ஸ், நம்பிக்கையினால் விளையும் விளைவுகள். இதைச் செய்தால் இது நடக்கும் என்று ஒருவர் மனதில் முழு நம்பிக்கை உருவாகிவிட்டால், அந்த குறிப்பிட்ட செயலை செய்யும்போது, அவர் நம்பிக்கை கொண்ட விளைவுகள் அவருக்கு நடக்கும். அவரின் நம்பிக்கை தவறாக இருந்தாலும் அதற்குரிய விளைவு அவருக்குக் கிடைக்கும்.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.