Split personality என்பது மனதினால் சுயமாக உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரம். அவர் பெயரிலேயே வேறுபட்ட குணாதிசயங்களுடன் மற்றுமொரு நபர் அவர் மனதுக்குள்ளே வாழ்ந்துக் கொண்டிருப்பார். தேவைகள் உருவாகும் போது அவர் செயல்படுவார். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பெர்சனாலிட்டிகளும் இருக்கலாம்.

சிலருக்கு தெய்வங்கள், தேவர்கள், தேவதைகள், பேய்கள், பிசாசுகள், போன்ற உருவங்களிலும் தன்மைகளிலும் கூட உருவங்கள் இருக்கும். அந்த உருவங்கள் அவர்களுடன் பேசும், சிரிக்கும், விளையாடும், மிரட்டும், வழிகாட்டும். நன்மையான விஷயங்களையும் செய்யும், தீமையான விசயங்களையும் செய்யும்.

நன்மைகளைச் செய்தாலும், தீமைகளைச் செய்தாலும் இரண்டுமே அவரின் மனம் தொடர்பான விசயங்கள் மட்டுமே.