Google Docs இது மாணவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், எழுதுபவர்களுக்கும், மிகவும் பயனுள்ள மென்பொருளாகும். கையடக்க தொலைப்பேசியில் இந்த மென்பொருள் இருப்பதனால் எங்கேயும் எப்போதும் எழுதலாம். கற்பனைகள் தோன்றும் போது காகிதங்களைத் தேட வேண்டிய அவசியமில்லை. Microsoft word டுக்கு மாற்றாக இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம். இது முற்றிலும் இலவசமானது.

இந்த மென்பொருளை கையடக்க தொலைப்பேசியிலும், கணினியிலும், டேப்லெட்டிலும், ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி எழுதும் போது பலர் ஒரே நேரத்தில் ஒரே கட்டுரையே எழுதலாம், திருத்தலம்.

இந்த மென்பொருளில் எழுதும்போது நீங்கள் எழுதுபவை உடனுக்குடன் உங்களின் google drive கணக்கில் பதிந்துவிடும். நீங்கள் எழுதுபவை அழிந்துவிடாமல் பாதுகாக்கலாம். இந்த மென்பொருளைக் கொண்டு தமிழில் எழுதினாலும் எழுத்துப் பிழைகளைச் சரி பார்க்கலாம்.

Download Google Docs
http://bit.ly/2GAzie3